
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்......
சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு சாகித்ய அகாடமி விருது
2002ம் ஆண்டின் சிறந்த படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற கவிஞர்சிற்பி பாலசுப்பிரமணியம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 'ஒரு கிராமத்து நதி' என்ற அவரது கவிதை நூலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு சிறந்தமொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை சிறந்த படைப்புக்கான விருதை வென்றுள்ளார். வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் இந்த விருதுவழங்கப்படும். ரூ. 25,000 பணமும் பாராட்டுப் பட்டயமும் இந்த விருதுடன் தரப்படும்.
வானம்பாடி என்ற தமிழ் கவிதை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் சிற்பி பாலசுப்பிரமணியம் இதுவரை 10 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தனது மெளன மயக்கங்கள், பூஜ்யங்களின் சங்கிலி ஆகிய படைப்புகளுக்காக தமிழக அரசின்பாவேந்தர் விருதுகளை வென்றார்.
பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் பல மாணவர்களால் பி.எச்டிஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவரது வழிகாட்டுதலின் கீழ் 15 மாணவர்கள் டாக்டர் பட்டங்களையும்வென்றுள்ளனர்.
தனது 66 வயதிலும் தீராத தமிழ் தாகமும் படைப்பாற்றலும் கொண்டு உழைத்து வருபவர் சிற்பி பாலசுப்பிரமணியம்.
நன்றி தட்ஸ் தமிழ்




1 கருத்து:
சிற்பி அவர்களின் படம் சிறப்பு.
தங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
கருத்துரையிடுக