Kapilan Release

வியாழன், 28 மே, 2009

குறளறம்




குறளறம்
Posted by Picasa

ஜெயகாந்தன் யுகம்


ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லாமையால், தனது ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டில் இவர் நடத்தப் பட்ட விதம் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.அங்கு, அவரது மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர், ஜெயகாந்தனை கம்யூனிச வேதாந்தத்திற்க்கும், பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.

ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு பெரும்பாளான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகள் விற்றும் களித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப் பட்டது.ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிப் புரிந்தார். இந்த எதிர்ப்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது - அவர் சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.இக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன.தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார்.பின்னர் காமராசருடைய தீவிர தொண்டனாக மாறி, தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் துவங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாயின. இவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுதாளர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படமாக்கப் பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலாக உரு பெற்றது.

[தொகு] படைப்புகள் [தொகு] தன் வரலாறு

* ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
* ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )

[தொகு] வாழ்க்கை வரலாறு

* வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
* ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

[தொகு] நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்

* வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
* கைவிலங்கு (ஜனவரி 1961)
* யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
* பிரம்ம உபதேசம் (மே 1963)
* பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
* கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
* பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
* கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
* சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
* ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
* ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
* கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
* ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
* பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
* எங்கெங்கு காணினும்... (மே 1979)
* ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
* கரிக்கோடுகள் (ஜூலை 1979)
* மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
* ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
* ஒவ்வொரு கூரைக்கும் கீழே...(ஜனவரி 1980)
* பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
* அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
* இந்த நேரத்தில் இவள்... (1980)
* காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
* காரு (ஏப்ரல் 1981)
* ஆயுத பூசை (மார்ச் 1982)
* சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
* ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
* ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
* இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
* இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
* காற்று வெளியினிலே...(ஏப்ரல் 1984)
* கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
* அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
* இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
* ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
* சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
* உன்னைப் போல் ஒருவன்
* ஹர ஹர சங்கர (2005)

[தொகு] சிறுகதைகள்

* ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
* இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
* தேவன் வருவாரா (1961)
* மாலை மயக்கம் (ஜனவரி 1962)
* யுகசந்தி (அக்டோபர் 1963)
* உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
* புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
* சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
* இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
* குருபீடம் (அக்டோபர் 1971)
* சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
* புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
* சுமைதாங்கி
* பொம்மை

[தொகு] கட்டுரை

* பாரதி பாடம்
* இமயத்துக்கு அப்பால்

[தொகு] திரைப்படமாக்கப்பட்ட இவர் கதைகள்

* சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான்
* புதுச் செருப்பு

[தொகு] ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்

* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான் [1]

[தொகு] சிந்தனை சிதறல்கள்
[தொகு] ஜெயகாந்தன் பேட்டிகள்



* "முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே"

* "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"

* "மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே"

* "அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்"

* "நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... "


[தொகு] விருதுகள்

  • * சாகித்ய அகாதெமி விருது
  • * 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
  • * 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
[தொகு] மற்ற எழுத்தாளர்களின் கருத்துக்கள்

* "ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கி பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்"

- அசோகமித்ரன்

*
"மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர்தத்ரூபம்என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். "

- வண்ணநிலவன்

* " பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்பÊடுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்."

- எஸ்.ராமகிருஷ்ணன்

*

நன்றி: விக்கிபீடியா

தொடுகுறி சாஸ்திரம்



தொடுகுறி சாஸ்திரம்
Posted by Picasa

பாரி வேட்டை



பாரி வேட்டை
Posted by Picasa

திருநெடுந்தாண்டகத்தில் அகப்பொருள்



திருநெடுந்தாண்டகத்தில் அகப்பொருள்

Posted by Picasa

பறம்புமலை - திருக்கொடுங்குன்றம் வரலாறு



பறம்புமலை - திருக்கொடுங்குன்றம் வரலாறு
Posted by Picasa

ஜெயகாந்தன் பேட்டிகள்



ஜெயகாந்தன் பேட்டிகள்

Posted by Picasa

உதய நகரிலிருந்து.....



உதய நகரிலிருந்து.....
Posted by Picasa

உயிரின் நிறங்கள்



உயிரின் நிறங்கள்
Posted by Picasa

இன்பக் குறள்


இன்பக் குறள்

சொற்பொழிவாளர் பாரதியார்



சொற்பொழிவாளர் பாரதியார்

மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி


மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி

நூல்களின் அணிவகுப்பு



அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர்

உதய நகரத்திலிருந்து நூல் வெளியீடு

பாரதியாரின் ௧௨௫ பிறந்தநாளும் ஆரோவில் ௪௦ பிறந்த நாளும் ஒன்றிணைந்த ௨௦௦௭ ஆம் ஆண்டிலிருந்து ௨௦௦௮ ஆம் ஆண்டு வரையிலுமான ஓராண்டு காலத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டது ஆரோவில் தமிழ் மரபு மையம்.
அதன் துவக்க விழாவிற்கு திரு ஜெயகாந்தன், பாடகர் கங்கை அமரன் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
ஆன்றோர்கள் நிறைந்த அவையில் கவிஞர் இரா. மீனாட்சி அவர்கள் எழுதிய "உதய நகரிலிருந்து" நூலை ஜெயகாந்தன் அவர்கள் வெளியிட, ஆரோவில் திபெத்தியன் கலாசார மையத்தைச் சேர்ந்த திருமதி கல்சங் அவர்களும் அவர்தம் இளம் குழந்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
மறக்க இயலாத இனிமை நிறைந்த அந்தக் காட்சியைத்தான் புகைப்படத்தில் பார்க்கிறீர்கள்! கண்ணன் குழலூத குழந்தையும் ஜெயகாந்தனும் ஒரு நேர்கோட்டில் பார்த்திருக்க கவிஞரும் கல்சங்கும் அன்பு பரிமாறிக் கொள்ளும் நல்ல காட்சி!

கவிஞர் இரா.மீனாட்சி குறித்து...


"Meenakshi' as she is better known in Auroville, hails from Madurai, Tamil Nadu, and joined Auroville in 1976. She is a professional social worker, experienced university-level teacher, writer, translator, magazine editor, counsellor and guide. She is also a well known educationalist in Tamil Nadu in the field of innovative methods of teaching, particularly for the non-schoolgoing children and child labourers.

Poetry and writing

Meenakshi is a well-known modern poetess of India. To her credit she has published four books of anthologies of her poems in Tamil under the titles 'Nerunji', 'Sudupookkal', 'Deepavalipagal' and 'Marupayanam', the last with English translations. Her poems have been included in the multi-lingual National Book of Poems by the Indian Centre for Cultural Relations, Ministry of Human Resource Development, Government of India. Some of her poems have also been prescribed for the university students in Tamil Nadu, and Penguin has included her poems in two of its English books, 'The Women poets of India' and 'The New Writing in India'. 'World Poetry' published by W.W.Norton & Company, New York, as a compilation of 1,600 verses from the past 4,000 years, also includes her poems, as one of the five poets of the 20th century chosen from India.

Meenakshi has received the prestigious Coimbatore Devamagal award for her contribution to Tamil Creative Writing in 1998. She has also been honoured as a leading educationalist and poetess by Soundaraja Endowment at Chennai, and was awarded the Dr.Henrich Award by FAO German Action Group, Germany, for her active contribution in the field of rural youth work in the year 1978.

Tamil heritage and culture

Meenakshi has initiated a group involved in realising the Tamil Heritage Centre in Auroville. The land for this project has been assigned within the Bharat Nivas complex. A series of lectures on Tamil Heritage was organised by her at Bharat Nivas last year. She is also running a Tamil newsletter (Auroville Grama Seydhi Madal) for the past three years to link Auroville villages & Tamil Nadu at large.

Involvement in education

On the educational front, Meenakshi is the founder and director of a school in Auroville, Ilaignarkal, which has for the past 24 years dedicated itself to education of the needy young people in and around Auroville. Ilaignarkal concentrates on Tamil heritage projects, through which languages, cultures, history, science and other basic social life structures are taught in a joyful way. She is also one of the coordinators of Tamil Ulagam, an after-work school programme which manages eleven schools in Auroville region serving nearly 1,000 children from both school-going and working backgrounds. She takes care of the teachers' in-service training schedule, has created new teaching tools, and is carrying out regular evaluation of the interactions between Tamil Ulagam schools and the village communities. Another of her projects has been the creation of the Auroville Education Resource Centre (AERC), together with other outreach educational activists in the Auroville region and a number of dedicated Auroville educationalists.

Social work and consultancy

Meenakshi is one of the founders and an active executive of SEWA (Small Employer's Welfare Administration), a unit of Auroville Foundation serving in the fields of employer-employee relations, worker's education, housing, job placement, etc. SEWA has completed a mega socio-economic survey of all the employees of Auroville, the first of its kind, with the support of Stichting De Zaaier Foundation, Holland. She is also a member of the Bharat Nivas (Indian Pavilion) management team; one of the coordinators for the Centre for Indian Culture; and a consultant in special areas - such as Indian culture, Hinduism, Tamil heritage and culture, Tamil literature, women's studies, local herbal medicines, South Indian cooking, the socio-economic, political and cultural life of the native Tamil people, local handicrafts, village relations, the teaching of Tamil language and allied subjects, for guests, visitors, Aurovilians, local teachers and students as well as researchers from all over the world.

It is noteworthy that she was awarded the Dr.Henrich Award by FAO German Action Group, Germany, for her active contribution in the field of rural youth work in the year 1978.
Representative for Auroville

Meenakshi has traveled widely. She has delivered lectures, recited her poems, and conducted lecture demonstrations in many educational centres in the US, Europe, Indonesia and India. She was nominated by the people of Auroville to receive the 'Fifty Global Communities Award' during the 50th Anniversary celebrations of the United Nations in 1995 in New York. During the same visit there, she also received on behalf of Auroville an 'Altar of Peace' (a huge redwood table) gifted to Auroville by George Nakashima's daughter and family at a ceremony in St.John's Cathedral, New York. This special table is at present kept at the Centre for Indian Culture, Bharat Nivas, but will be shifted later to the complex planned for the Sri Aurobindo World Centre for Human Unity (SAWCHU).
Present and future commitments


Today Meenakshi is devoting much of her time to Auroville's Unity Service (a conflict resolution group), and is regularly approached not only by Auroville Working Groups, but also by outside agencies - to help in building better working relations with the local people and to find ways to develop their interests. Her other work in Auroville continues to focus primarily on non-formal educational methods, worker's welfare schemes and Tamil Heritage related projects.




நன்றி
ஆரோவில் இணையதளம

சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு




சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
By முனைவர் மு பழனியப்பன்



காரைக்குடி கம்பன் கழகத்தின் அறுபத்தெட்டாம் ஆண்டுவிழா கம்பன் மணிமண்டபத்தில் 9-4.2006 அன்று மாலை முதல் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் , முனைவர் ஒளவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான் முதலியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவிற்குத் தலைமையேற்ற ஜெயகாந்தன் கவிஞர் சேதுபதியின் சீதாயணம் என்ற நெடுங்கவிதைத் தொகுப்பை வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். அவரின் உரையில் இடம் பெற்ற சிலபகுதிகள் பின்வருமாறு.

கடவுள் புகழ்பாட ஒருமைப்பாடு, சுய அன்பு மட்டுமே போதும். ஆனால் கம்பன் புகழ்பாட காலத்தின்மீது அன்பு வைத்திருக்க வேண்டும். மனிதர்க்கு மனிதர் மீது அன்பு இருப்பது இயல்பு. அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் கம்பன் கம்பராமாயணத்தைப் பாடினார் என்பது மனிதாபிமானிகளின் கருத்து. சத்திரிய தருமத்தை நனவாக்குவதற்குத்தான் இராமாயணம் என்றார் வால்மீகி. ஆனால் கம்பன்தான் அது மனிதனின் புகழ் பாடுவது என்றார். மனிதனே புகழுக்கு உரியவன். கடவுளும் வாழ வேண்டும் என விரும்புபவன். கடவுள் வாழ வேண்டுமெனில் அவர் மனித உருவில் தான் வ்ரவேண்டும் என கம்பராமாயணம் சொல்கிறது. ... சேதுபதியின் சீதாயணம் நூலைப் படித்துப் பார்த்தேன். கம்பனைப் படித்தால் கம்பன் மாதிரி எழுதவரும் என்பதற்கு இந்த நூல் ஒரு அத்தாட்சி. கம்பன் மாதிரி எழுத வேண்டும் இன்றைக்கு இருக்கிற புதிய விஷயங்களை எழுத வேண்டும், அந்தக் காரியத்தை சேதுபதி இங்கு நன்றாகச் செய்திருக்கிறார். என்றார்.

...........................................................................................................................................

சிதைந்த சித்திரங்கள் ----------------------- திரைப்பட வாய்ப்பு மறுக்கப்பட்டு ஊடக வாசல்கள் மூடப்பட்டு அலைகள் உரசும் கரையின் நடுவே பயணம் போனான் கம்பன் பசியோடு சுவடுகளின் உதிர்ந்த கவிதைச் சொற்களைக் கையகப்படுத்திய கடல் பையப் பையப் பாற்கடல் ஆயிற்று,,, வறண்ட காவிரி மனதைப் பிறாண்ட தொண்டை அடைத்தது கவிச்சக்கரவர்த்திக்கு. கொக்கக்கோலா விற்கும் சிறுவனுக்குக் கொடுக்கக் காசில்லை. சம்பந்தமில்லாமல் அரபு நாட்டிற்குப் பிழைக்கப்போன சடையப்பன் ஞாபகம் தொற்றிக் கொண்டது. குலோத்துங்கன் டெல்லிக்குப்போய் நான்கு நாளாச்சு அமெரிக்க அதிபர்க்குக் கொடை கொடுக்கப் போனவன்,,, மிச்சமிருக்கும் காவியச் சித்திரங்கள் கோடைவெயிலில் வியர்வைத் துளிகளாய் உதிரத் தொடங்கின,,, (தொடரும்) -சேதுபதி [ இது நெடுங்கவிதைகளின் தொகுப்பு நூல் ]





கபிலன் வெளியீடுகள்

http://picasaweb.google.com/lh/photo/vV2KyxWXsZd1WG5k5xVNkg?feat=directlinkமானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - . சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்ி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - .இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி (என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - .சொ.சண்முகனார்
பொருட்குறள் - .சொ.சண்முகனார்
இன்பக்குறள் - .சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - .சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு

பதிப்பகத்தின் நிகழ்வுகள்

Children’s book fair on
Staff Reporter தி ஹிந்து
PUDUCHERRY: Music, history, science, fantasy, adventure … these are just a few topics that you can find books on at the Children’s Book Fair. The fair, which opened on July 15 is on at Kalakendra, Bharat Nivas Complex, Auroville, till July 25.
A press release here from the Tamil Heritage Centre and Kapilan Pathippagam, said that books in English, French and Tamil are being offered at a discount of about 15 to 20 per cent. At the venue an exhibition of photographs on the Masi Magam festival and a display of metal statues by artisans of Bommiarpalayam are also being held.
Writer Meenakshi said a children’s reader’s forum has been formed, to enable students of schools in and around Auroville to meet every month. The forum will introduce various books to children so that they can cultivate the habit of reading books. Other activities include face-to-face meetings with writers and storytelling, poem recitation and book reviews, she added.

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு