புதன், 22 ஆகஸ்ட், 2012

மலேசியப் பேச்சுத் தமிழ் வரலாறுபரமசிவம் முத்துசாமி

இரா.குறிஞ்சி வேந்தன்

        மானுடம் முழுவதையும் தம் பாட்டுத்திறத்தாலே கூட்டிவைத்த பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்காணோம்’ என்று குறிப்பிட்டு, ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்றும் அருளாணை இட்டார். அம்மகாகவியின் கனவு இன்றைக்குக் கண்முன்னே நனவாகி வருகின்றது.

     வடவேங்கடம், தென்குமரி ஆகிய இடைப்பட்ட நானிலத்தில் தோன்றிய தமிழ் இன்று உலகத்தையே தன்வசப்படுத்தியிருக்கிறது. முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் செழித்தோங்கி உலகமுழுதாளுகின்றது.

    எங்கெல்லாம் தமிழர்கள் கால்பதித்தார்களோ, அங்கெல்லாம் தமிழும் தன்தடம்பதித்துக் கிளைத்து வளர்ந்திருக்கிறது. திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்ட தமிழர்களின் தோள்தழுவிச் சென்றது தமிழ்மொழி. தமிழியம் பரவிய உலகநாடுகளுள் குறிப்பிடத்தக்கது மலாயாபூமி. தாய்மண்ணை நேசிக்கும் எந்த மக்களும் தமிழர்களை விரும்புவர், காரணம் தமிழர்கள் எந்த மண்ணையும் தன் தாய்மண்ணாகக் கொண்டு போற்றுவர் என்பதே. 

    வரலாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது போல, தமிழகத் தமிழ், இந்தியத்தமிழ், அயலகத்தமிழ் வரலாறு என்பதான வரிசையில் ‘மலேசியப் பேச்சுத்தமிழ் வரலாறு’ ஒரு புதிய தடம்.

     தான் பெற்ற இன்பமாகிய தமிழ்மொழியின் மாண்பை எங்கே தன் சந்ததியினர் மறந்து விடுவாரோ என்று கவலை கொள்ளும் ஒவ்வொரு மலேசியத் தமிழருக்கும் இந்நூல் அது நீக்கும் மருந்து. ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி ரப்பர்த் தோட்டங்களுக்குள் விளைந்த இத்தமிழை அழகுடை நூல் வடிவில் செதுக்கித் தந்திருக்கிறார்கள் பேராசியர்கள் முனைவர் பரமசிவம் முத்துசாமி, முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகிய இருவரும். காலப்பெட்டகமாம் இந்நூலை வெளியிடுதற்கு இசைந்த அவர்களுக்கு நன்றி கூறி, பெருமையுடன் தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

குளிர் சாரற்கொடுங் குன்றம்

'Posted

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே!

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே!

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே!

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!

- திருஞானசம்பந்தர்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvv


கபிலன் வெளியீடுகள்
மானுடம் பேணிய தமிழ் - ஜோசப் சகாயராஜ்
சீதாயணம் - சேதுபதி
பாரிவேட்டை - சேதுபதி
தமிழ் இலக்கண உணர்வுகள் - ஆ. சிவலிங்கனார்
உதய நகரிலிருந்து - இரா. மீனாட்சி (தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புதுக்கவிதை நூல் விருது)
(புதுவை கல்லாடனார் அறக்கட்டளை விருது)
(திருப்பூர் தமிழ் சங்க விருது )
ஜெயகாந்தன் பேட்டிகள்
சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் - சேதுபதி
பைந்தமிழ்க் காவலர் பழ. முத்தப்பனார் - சேதுபதி
பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி (படங்களுடன்)
பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு - மரு. பரமகுரு (திருப்பூர் தமிழ் சங்க விருது)
மனச் சுவடுகள் - மரு. பரமகுரு
இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவப் புதினங்களில் ஒடுக்கப்பட்டோர் - உ.இராசு
சொற்பொழிவாளர் பாரதியார் - சேதுபதி
(என்.சி.பி.எச். கலை இலக்கியப் பெருமன்ற விருது)
அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் - இரா. மீனாட்சி, சேதுபதி
அற்புதத் துறவி அடிகளார் - சேதுபதி
சகாதேவர் அருளிய தொடுகுறி சாஸ்திரம்
குறளறம் - அ.சொ.சண்முகனார்
பொருட்குறள் - அ.சொ.சண்முகனார்
இன்பக்குறள் - அ.சொ.சண்முகனார்
உயிரின் நிறங்கள் - அ.சொ.சண்முகனார்
திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவமூர்த்தங்கள் - பா. சுந்தர்
மார்கழிப் பாவை - கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
மார்கழிப் பூக்கள் - மரு. பரமகுரு
பரமகுரு பாடுகிறேன் - மரு. பரமகுரு